திதி: 27-02-2022
யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சாய்சங்கர் விநாயகமூர்த்தி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
"ஒரு நாளும் மாறாது - எம் சொந்தம்
எங்கள் உயிரோடு உயிர் சேர்ந்தது உன் - பந்தம்
ஆண்டு இரண்டு சென்றாலும் - எம்
மனங்களில் நிறைந்திருக்கிறாய் - அண்ணா
இறப்பது வாழ்வில் இயற்கையின் நியதி
இளவயதில் நீ பிரிந்ததுதான் - எங்கள்
இதயத்தை வாட்டுதண்ணா
காலங்கள்
கடந்து போனாலும்
இன்னும் கண்ணீர்
மட்டும் ஓயவில்லை அண்ணா
இன்றும்
ஆண்டுகள் இரண்டான போதும்
வார்த்தைகள்
மெளனமாகி
இதயங்கள் காயமாகி விழியோரம்
ஈரமாகி செல்கிறது நாட்கள் தினமும்
நிஜமான உங்களை எங்கள் அருகில்
வைத்து
வாழ ஆசைப்படுகிறோம்
ஆனால் நீங்கள் நிழலைக்கூடத் தராமல்
நினைவுகளைத்தான் தந்துவிட்டுச் சென்றுள்ளீர் !
உங்கள் நினைவுகளை சுமந்து நிற்கும்
குடும்பத்தினர்....!
Rest In Peace our deepest condolences goes out to your family during this time