யாழ். கச்சேரி நல்லூர் வீதி, பாரதிலேனை பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் யோகரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.
இல்லமெங்கும் இருந்து
உள்ளமெல்லாம் நிறைந்து
கள்ளங்கபடமற்று
அமைதியின் அடைக்கலமாய்
அன்பின் பிறப்பிடமாய்
பாசத்தின் ஜோதியாய்
நேசத்தின் ஒளியாய் இருந்த நீங்கள்
மறைந்த செய்தி கேட்டு
துன்பமுற்றிருந்த வேளையில் ஆறுதல் கூறி அரவணைத்து,
துன்பத்தில் பங்கெடுத்து அனுதாபம் தெரிவித்து,
உதவி புரிந்த உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Accept our Heartfelt Condolences