யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சபாபதிப்பிள்ளை சிவானந்தன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் மறைந்து ஆண்டு பத்து சென்றாலும்
எங்கள் மனதில் நீங்கள் மறைந்த சுமை
கனதியாக நிற்கின்றது
நடுக்கடலில் திசையறி கருவியற்ற
ஓடம்போல் உங்கள் அன்பு மனைவி
வழிதேடி விடையற்று வீட்டின் வாசற் கதவில்
நீங்கள் மீண்டும் வருவீர்கள் என்ற
ஏக்கக்கனவில் நித்தமும் உங்களை
நினைத்தே வாழ்கின்றார்
அன்பை சொரிந்து ஆராட்டி சீராட்டி
எம்மை ஆளாக்கிய அன்புத் தெய்வம்
எங்கள் ஐயாவின் அரவணைப்பு
நினைவுகளை மட்டும்
மனக்கண்ணில் இமைமீட்டி உங்கள் பிள்ளைகள்
கண்கள் பிதுங்கி கண்ணீரில் மிதக்கின்றனர்
காலம் போகலாம் காயங்கள் மாறலாம்
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் எம்மைவிட்டுப் போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் நெஞ்சினில் சுமந்து நிற்போம்
நெஞ்சு இருக்கும் வரை உங்கள் நினைவு இருக்கும்