Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 OCT 1946
இறப்பு 10 DEC 2020
அமரர் இரத்தினம் சின்னக்குட்டி (பட்டு)
வயது 74
அமரர் இரத்தினம் சின்னக்குட்டி 1946 - 2020 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி : 19-11-2022

யாழ். தெல்லிப்பழை கொல்லன்கலட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Stryn, Tromso ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் சின்னக்குட்டி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் குடும்பத்தின் முத்தே அப்பா
எம் இதயத்து திருவிளக்கே
முத்து சறுக்கியதோ மகுடமுடி சாய்ந்ததுவோ
எம் இதயம் உங்கள் நினைப்பில்
எண்ணெய் இல்லா திரி ஆச்சே
ஆண்டு இரண்டு ஆனாலும்
ஆறாது எம் இதயம்

பாசம் காட்டிட இதயத்தின்
 பக்கத்தில் அமர்ந்த அப்பாவே
 நெஞ்சில் நம்பிக்கை எனும்
விதையை விதைத்த
முதல் கடவுள் அப்பாதான்

கண்ணில் கண்ணீர் வந்தாலும்
 உங்கள் முகம் மறையவில்லை
 என் வாழ்வின் இனியவரே
 என் இதய உறவே
உங்களின் பிரிவு என்பது
யாராலும் திருடமுடியாத பொக்கிஷம்

ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப்பிணைப்பினால் நாம்
 பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய்
 வையத்தில் வாழ்ந்த உங்கள்
 அன்புள்ள ஆத்மாவின் சாந்திக்காய்
 வேண்டுகின்றோம்!

என்றும் உங்கள் நினைவாக வாழும்
குடும்பத்தினர்....  

தகவல்: குடும்பத்தினர்