யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரவிப்பாஞ்சானை வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
இதயம் ஏற்க மறுக்கிறது எம் தந்தையே...
உருண்டு ஓடி விட்டன ஐந்து வருடங்கள்
எத்தனை வருடங்கள் ஓடினாலும் ஏற்குமோ
எம் மனம் உங்கள் பிரிவை...
இறப்பால் இறைவன் உங்களை பிரித்தாலும்
நினைவுகள் எனும் உயிருடன் எம் உள்ளங்களில்
வாழ்ந்து கொண்டு வழிகாட்டி
வாழ வைக்கும் எம் தந்தையே...
எவர் என்று முகம் பாராமல்
பிறர் துன்பம் என் துன்பம்
பிறர் கண்ணீர் என் கண்ணீர் என
உதவி கேட்போருக்கு இல்லை என்று சொல்லாமல்
கர்ணனாய் வலம் வந்த எம் தந்தையே...
எத்தனை கஷ்டங்கள் வரினும் எல்லாவற்றையும்
துஷ்டம் என தள்ளி என் முருகன் காப்பான் என
துன்பங்களை இன்பமாக மாற்றிய எம் தந்தையே...
ஐந்து வருடங்கள் ஓடி முடிந்தாலும்
ஆறாது ஆறாது உங்கள் பிரிவு
உங்கள் நினைவுகள் மட்டும் முடியாமல்
துயரங்களை சுமந்து நிற்கும் உங்கள்...
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்