காதோரம் செய்தி வர கனவேன்று நினைத்த போதும் ஏனிந்த செய்தி வதந்தியாக இருந்திடாதோ என ஏங்கிக்கொண்டது மனது . இருந்த போதும் விதி என்ற இயமதூதன் விளையாடி விட்டான் , இடை வாழ்வில் உன்னை தன் பசிக்கு இரையாக்கி விட்டான், சகவாழ்வில் நீ எம் பள்ளிக்கால நண்பன் விளையாடும் பருவத்தில் இருந்து பொறுப்பாக பல செயலாற்றும் பருவம் வரை அயராது உழைத்து பல நெகிழ்வான சேவைகளை மனதார ஆற்றி வந்தாய் . தவறாக அறிந்தால் தவறாது குரல் கொடுக்கும் உன் தளராத மனம் பல காலம் நிலைக்கும் என நிலையாக நம்பி இருந்தோம். ஆறாது ஆறாது அழுதாலும் தீராது வாழும் நாள்வரை உன் நினைவுகள் சுமந்து வருந்துவதை தவிர விதி என்ற ஒன்றை வெல்பவர் யார் இந்தப்பாரில் உளரோ நண்பா, உனது ஆத்மா அந்தப்பரம்பொருளின் பாதாரவிந்தங்களில் அமைதியாக முத்திபெற வேண்டி நிற்கின்றோம் உனது நண்பர்களாக ஓம் சாந்தி 🙏
We are sorry for your loss, was such a great friend. The memories will live forever with us.