

யாழ். வண்ணார்பண்ணை BA தம்பிலேனைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Leiden, இங்கிலாந்து Sutton Surrey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசநாயகம் இராமச்சந்திரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பை விதைத்த அப்பாவே
அறுவடை செய்ய ஏன் மறந்தாய்?
பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
பலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்?
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஈராண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் என்றும்!!!
கலையாத உங்கள் முகமும்
கள்ளமில்லா உங்கள் சிரிப்பும்
அப்பா இனி காண்பது எப்போது?
ஆயிரம் ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என்றழைக்க
நீங்கள் எனதருகில் இல்லையே!
இன்றும் என்னை நிழல் போலத்
தொடர்ந்து வரும் அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை உள்ளடக்கி
கண்ணீரை காணிக்கையாக்குகின்றேன் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
Our deepest condolences. Rest in peace.