

திதி: 26-08-2022
யாழ். வண்ணார்பண்ணை BA தம்பிலேனைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Leiden, இங்கிலாந்து Sutton Surrey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசநாயகம் இராமச்சந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பன்னிரண்டு திங்களும் நீங்கள் இன்றி
பன்னிரண்டு நிமிடங்களாய்
கரைந்தோடி விட்டதே அப்பா!
எம் குலத்தின் ஒளி விளக்கே
அறிவூட்டி பண்பு கற்று அன்பால் சீராட்டி
தெய்வபக்தியை உரமாக்கி பெருமிதம் கொண்டவரே
எங்களை வாழவைத்து அழகு பார்த்த தெய்வமே
உங்கள் திருமுகம் இனி எப்பிறப்பில் காண்போமோ
அப்பா என்றழைக்க யாருமற்று தவிக்கின்றோம்...
கனவிலும் நினைவிலும் உங்கள்
நினைவுகளுடன்
பயணிக்கின்றோம் அப்பா
கோடான கோடி திங்கள் வந்தாலும்
அகலாது உங்கள் பிரிவின் வலி!
நீங்கள் கடவுள் தந்த வரம் அப்பா
எங்களுக்கு எத்தனை முறை
பார்த்தாலும் திகட்டாது உங்கள் இன்முகம்
காலத்தால் ஆறாது உங்கள் இழப்பின் தவிப்பு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய கண்ணீருடன்
ஈசன் பாதம் வணங்குகின்றோம்!
என்றும் உங்கள் பசுமை நினைவுகளுடன்
மனைவி ,மக்கள் ,மருமக்கள்
பேரப்பிள்ளைகள்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
Our deepest condolences. Rest in peace.