அன்புக்குரிய சின்னம்மாவிற்கு, தாய்க்கு தாயாக எனது கல்லூரிக் காலங்களில் எனக்கு நீங்கள் வழங்கிய அன்பும் ஆதரவும் விடுதி வாழ்வில் நான் இழந்த வீட்டு உணவை உங்கள் பிள்ளையாகவே சமையல் அறையில் அமர்ந்து அனுபவித்த நாட்கள் இனிமையானவை. அவை என்மனதில் நீங்கா நினைவாக எப்பொழுதும் இருக்கும். உங்கள் வாழ்நாளின் இறுதி நாட்களில் தூர தேசத்தில் உங்கள் நெருக்கத்தை இழந்தேன். இப்பொழுது எங்களை எல்லாம் வீட்டு தொலைவாக நாங்கள் காணதபடி நீங்கள் சென்றாலும் உங்கள் நினைவுகள் நெருக்கமாயிருக்கும். உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகளுடன் நானும் இணைகிறேன். உங்கள் அன்பும் அரவணைப்பும் எங்கள் மற்றும் அவர்கள் நினைவாக இருக்கும். உங்கள் நற்கிரியைகள் எல்லாம் வல்ல இறைவனால் எப்பொழுதம் நினைவுகூரப்பட்டு அதற்கான பலனளிக்க அவர் நீதியுள்வராயிருக்கிறார். என்றும் உங்கள் பிரிவால் வாடும் அனைவருக்கும் நீடிய சமாதானம் கிடைப்பதாக. அன்புடன் மகன் அருளும் குடும்பத்தாரும் இலங்கை.