கிளிநொச்சி பளை மாசாரைப் பிறப்பிடமாகவும், யாழ். நீராவியடி, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய இடங்களைவசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா இரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.
மாசாரில் பிறந்த மகத்தான உறவே வாசம் வீசும் மல்லிகை அழகே
பாசமாய் பேசியவரே ஓசைபடா அழைக்கும் ஒப்பற்ற பிறப்பே.....
எம்மை விட்டு ஏன் பிரிந்து சென்றீர் உங்கள் நினைவால் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.