முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா நித்தியானந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராண்டு சென்றாலும் மாறாது உங்கள் நினைவு
நான் போகும் வழியெல்லாம்
என் விழிதேடும் உங்கள் நிழல்காண
அடையாத இலக்கொன்றை
அடைந்தது போல்
நாள் எண்ணி
உங்கள் வரவுக்காய்
துடியாக துடிக்கின்றேன்
நான் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் காற்றாக
உங்கள் காதோரம் வருமென்று
நாள்தோறும் நான் நினைக்க
அவையாவும் நிஜமில்லை என்றிருந்தாலும்
நினைவாலே நிஜமாக்க கதைபேச முயல்கின்றேன்
கவிக்கு கவியெழுத முடியாது என்று தெரிந்தாலும்
சிலவரிக்கொண்டு உங்கள் தங்கத்தலைமகளால் எழுதப்படும்
சிலவரிகளே இவையாகும்.
மறுஜென்மமொன்று இனியேதும் வந்தால்
அதிலுங்கள் தங்கத் தலைமகளாக
மறுபிறப்பொன்று நானெடுப்பேன்.
அதில் நாமிருவரும் பிரியாத வரம் பெற்று
உங்களைப் பிரியாத மகளாக
நிஜமாக நான்வாழ வரம் ஒன்று தரவேண்டும்.
என்றும் உங்கள் நினைவுகளோடு
அன்புடன் தங்கத்தலைமகள்...