ஆறாத்துயரத்தில் எம்மை ஆழ்த்திவிட்டு ஆழ்துயில் கொண்ட அண்ணலே !! தலை வணங்குகிறேன் நானும்....🙏 உம்மோடு நினைவுகள் சில..... முதன்முதலில் சந்திப்பு அக்காளுக்கு கல்யாணம் பேசி வரும்பொழுது... விருப்பமா என்று கேட்டீர்... உவகை கொண்டேன் யானும்... உறவாக இருந்தாலும் உங்களோடு உடன் இருக்கவில்லை யான்.... என் உற்ற சகோதரர்கள் எழுவருடன் தாயாரையும் சேர்த்து கூட்டுக்குடும்பமாக... வளர்த்து, தகப்பனுக்கு சமமாக ஆதரித்து பராமரித்தீர்.... நன்றி சொல்ல உமக்கு வார்த்தையில்லை எனக்கு.... எனது தந்தையின் மரண நிகழ்வின் போது... நான் மூதூரில் இருந்து வரும் மட்டும் எனக்காக காத்திருந்து அடக்கம் செய்த..... செயலை நினைத்து விம்முகிறேன். மூதூரில் நீர்பாசன திணைக்களத்தில்... நீங்கள், நான், யோகு மூவரும் வாழ்விலும் தாழ்விலும் ஒன்றாக இருந்து கடமையாற்றிய நாட்களையும்.... நினைத்து பார்க்கின்றேன். நீங்கள் எனது குடும்பத்துக்கு செய்த சேவைகளுக்கு மாற்றீடாக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.... இருந்தும், " தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரை தலையாலேதான் தருதலால் " என்பதற்கிணங்க என்னால் பிரதியுபகாரம் செய்யமுடியா விட்டாலும் அதற்கீடாக உங்களுக்கு நல்ல மருமகன் வாய்த்தது, உங்கள் சேவையின் மகத்துவத்திற்கு கிடைத்த பெரும்பேறு.... மிகுதி எல்லோரும் அறிந்த கதை... இறுதிகாலத்தில் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சுற்றம் சூழ, அகவை 84 இல் 05.11.2021 அன்று... இறைவனால் விதிக்கப்பட்ட நாள் வந்தபொழுது, உங்களோடு சேர்ந்த உடலுக்கு விடைகொடுத்து... சிவப்பேறு அடைந்த செல்வர், சிவபுரத்தில் உள்ளார் சிவனடிக்கீழ் பல்லோரும் ஏற்றப்பணிந்து... உடலில் துவக்கிய வேடம் உயிர்காகா உடல் கழன்றால் வேடம் உடனே கழலும் உடலுயிர் உண்மையென்றோர்ந்து கொள்ளாதார் கடலில் அகப்பட்ட கட்டையொத்தாரே.... - திருமந்திரம் - இத்துன்பவியல் சம்பவத்தை உறவுகளுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். ஈஸ்வரன் (மைத்துனர்) திருகோணமலை ஸ்ரீ லங்கா