அமரர் இரங்கநாதன் இராமசாமி
1937 -
2021
வட்டுக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உறவுப்பாலம் தகர்ந்தது
செந்நிற மேனியும் தெளிந்த சிந்தனையும்
சீரிய பார்வையும் அயராத உழைப்பும்
கலங்காத உள்ளமும் கொண்ட நீங்கள்
கனடா ஏகியது விண்ணுலகம் செல்லத்தானோ? மாமாவே!
சீராக வாழ்ந்து சிறந்த பிரஜைகளை உருவாக்கி
நன்மக்களைப் பெற்று அதில் ஒரு பிள்ளையை
என் அண்ணனுக்குத் திருமணம் செய்து வைத்து
பின் கனடா வந்து 21 வருடங்களாக
மூன்று, இரண்டு, இரண்டு பேரக்குழந்தைகளுடன்
உறவாடி விளையாடியது தர்மராஜனுக்கு
பொறுக்கவில்லையோ? மாமாவே!
எம்மைக் காணும் போதெல்லாம் இன்முகம் காட்டி,
வரவேற்று, உபசரித்து, அன்போடு பேசிய வார்த்தைகளை
இனி எப்போது கேட்போம் மாமாவே!
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
தங்களுடைய இழப்பைத் தாங்க முடியாமல் தவிக்கும் தங்கள் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
• சாட்சேஸ்வரி (சம்பந்தி) இலங்கை
• ஜெயா (பெறாமகன்) லண்டன்
• புஸ்பா (மருமகள்) இலங்கை
• சந்தோஷ் (பேரன்) இலங்கை
• பிரகஷ்வி (பேர்த்தி) இலங்கை
Write Tribute