Clicky

9ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 JUN 1934
இறப்பு 09 MAY 2017
அமரர் இராமு தர்மலிங்கம்
சமாதான நீதவான்- பரந்தன் குமரபுரம்
வயது 82
அமரர் இராமு தர்மலிங்கம் 1934 - 2017 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன் குமரபுரத்தை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமு தர்மலிங்கம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலைக் கதிரவனாய் எமக்கெல்லாம்
ஒளி தந்த தெய்வம் நீங்கள்
சோலைக் குயிலோசை கேட்கிறதே- உம் குரலோ
சிறந்த தலைவனாய் தந்தையாய் அன்னையாய்
தோழனாய் சமூக சேவகனாய்
உறவுகளுக்கெல்லாம் நல்ல நட்பாய்
வழிகாடி நின்றீர்களே
ஐயா! நீங்கள் என்றால்
பல கணம் தலை சாய்க்கும் எம் உள்ளம்
தர்மம் என்றால் உங்களிற்கு யார்? ஈடாவார்

துயரங்கள் பல சுமந்தும்
அயராது உழைத்து வழிகாட்டிய உத்தமர் நீங்கள்
உங்கள் பிள்ளைகள் அனைவருக்கும்
பத்திரமாய் பாதுகாத்து
உத்தரவாதம் கல்வியென்று
உத்தரவோடு கற்பித்து
சிறந்த சீராளர்களாக
எம்மை நிலை நாட்டினீர்களே

ஐயா! “நீங்கள்” நடந்துவரும்போது
புல்கூட நோகாது அவையும் “புன்னகைக்கும்”
நீங்கள் பேசுகின்ற வார்த்தைகளில்
கல்லும் கசிந்து விடும்

வெள்ளையுள்ளம் கொண்ட நீங்கள் என்றும்
எம் உள்ளங்களில் வாழ்கின்றீர்கள்
கள்ளம் கபடமில்லா உங்கள் செல்வங்கள் நாங்கள்
உங்கள் தடம் பதித்து நடக்கின்றோம்
ஆண்டாண்டு சென்றாலும் மாறாது
உங்கள் நினைவு எங்கள் உள்ளங்களில் ஒளியாக
வாழ்கின்றீர்கள்

தகவல்: நகுலன்(மகன் - லண்டன்), பிள்ளைகள்