
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன் குமரபுரத்தை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமு தர்மலிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எட்டு ஆண்டுகள் மறைந்தாலும்
ஆறவில்லை எங்கள் துயரம் ஐயாவே!
ஆறாத்துயரில் எங்களை ஆழ்த்தி
விட்டு
மீளாத் துயில் கொண்டீர்களே !!
இன்ப உணர்வுகளையும்
உம்மால்
கண்டு கழித்த
நாட்கள் கடந்து
உமை
நினைத்து கண்ணீர் மல்கும்
நாட்கள் வந்ததே
ஐயாவே!
வானில் சிந்திடும்
துளியில்
மண்ணில் பயிர்கள்
துளிர்விடும்
எங்கள் விழிகள்
சிந்திடும்
துளியின் வழியில்
உங்களை
கண்டிட முடியாதோ....
ஆண்டுகள் எட்டென்ன எட்டு
யுகம் கடந்தாலும்
அழியாத
உங்கள் நினைவுகள் எம்மிலே
வாழும்
ஐயாவே!
காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் கடந்தாலும்
உங்கள்
காலடித்தடங்களில் நாம் தொடருவோம்…..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.