அளவையூர் வர்ண இராமேஸ்வரனின் மறைவு குறித்து அவரது குடும்பத்தாருக்கு எமது குடும்பத்தின் துயர் பகிர்வும் வணக்கங்களும் திரு.வர்ண இராமேஸ்வரன் அளவையூரின் பொன்னொச்சிப்பூக்களில் ஒன்றாகிவிட்டார். திரு. வர்ணகுலசிங்கம் இராமேஸ்வரன் ஒரு சிறந்த கலைஞன் என்பது மட்டுமல்லாமல், மிகச்சிறந்த நற்பண்புகளைக் கொண்ட ஒரு மனிதன். தனது நாட்டையும், தனது மக்களையும் அளவு கடந்து நேசித்தவர் அதற்காக அயராது செயல்பட்டவர். அவருடைய இசையால், மண்ணையும் மண்ணை நேசிதவர்களையும் வாயாரப்பாடியவர். தமிழரின் விடுதலை வேள்வியில் எத்தனையோ பெயர் பெற்ற பாடல்களை பாடியது மட்டுமல்லாமல் மாவீரர் நாள் பாடலையும் பாடி தமிழர் வரலாற்றில் தனது நிரந்தரமான பங்களிப்பை செய்துவிட்டார். இவரின் பிரிவு என்பது தமிழினத்தின் பேரிழப்பு. இதனால் தமிழர் உலகமே துயருற்று நிற்கிறது. இவரின் பிரிவால் பெருந்துயரில் ஆழ்ந்திருக்கும் இவரின் குடும்பத்தாருக்கு எமது குடும்பத்தாரின் சார்பில் ஆறுதலையும் அன்பையும் தெரிவித்துக் கொள்வதோடு அமரர் திரு. வர்ண இராமேஸ்வரனுக்கு அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
Words may not suffice to express the heartfelt sorrow that we feel for this great loss but please accept our condolences and we will be remember in our daily prayers.May his soul rest in peace ....