Clicky

நன்றி நவிலல்
அன்னை மடியில் 05 NOV 1968
ஆண்டவன் அடியில் 25 SEP 2021
அமரர் இராமேஸ்வரன் வர்ணகுலசிங்கம் (வர்ண ராமேஸ்வரன்)
ஈழத்து இசைவாரிதி, சங்கீத மிருதங்க கலாவித்தகர், இசைக்கலைமணி, பல்கலைவித்தகர், நிறுவனர்- வர்ணம் இசைக் கல்லூரி, வர்ணம் கிரியேஷன்
வயது 52
அமரர் இராமேஸ்வரன் வர்ணகுலசிங்கம் 1968 - 2021 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். அளவெட்டி சிறுவிளான் கிராயட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமேஸ்வரன் வர்ணகுலசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் 25-09-2021 இல் இறைபதமடைந்த எமது குடும்பத் தலைவர் ராமேஸ்வரன் வர்ணகுலசிங்கம் அவர்கள் நோயுற்று Scarborough General Hospital, Toronto General Hospital களில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சகல வைத்திய உதவிகளை நல்கிய வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், தாதிமார், நிர்வாக உத்தியோகத்தர்கள், உதவியாளர்கள் ஆகியோருக்கும்,

அவர் விரைவாக பூரணகுணமடைய வேண்டி பிரார்த்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும்,

அவர் இறைபதமடைந்த செய்தியறிந்து எம் இல்லத்துக்கு வந்து ஆறுதல் கூறியோருக்கும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் மூலம் பல நாடுகளிலுமிருந்து அனுதாபம் தெரிவித்தோருக்கும்,

அவரது இறுதி நிகழ்வை மிகச்சிறப்பாக செய்ய உதவிய Chapel Ridge Funeral Home மற்றும் Highland Hills Crematorium ஆகிய நிறுவனங்களின் நிர்வாகத்தினர்களுக்கும், உத்தியோகத்தர்களுக்கும்,

இரு நாட்களும் கோவிட் தொற்று விதிமுறைகளை பின்பற்றியவண்ணம் வரிசையில் நீண்ட நேரம் காத்து நின்று மண்டபத்திற்கு நேரில் வருகைதந்து அவருக்கு இறுதி வணக்கத்தை செலுத்தி குடும்பத்திற்கு ஆறுதல் தந்தோருக்கும்,

மலர்வளையங்கள் அனுப்பியோருக்கும், மலர்மாலைகள் அணிவித்தவர்களுக்கும், மலர் அலங்காரங்கள் செய்தவர்களுக்கும்,

Cut-out வைத்தோருக்கும், கண்ணீரஞ்சலிகள் வெளியிட்டோருக்கும்,

நேரில் வந்தும், ஒலி ஒளி மூலமாகவும் அவருடன் பழகிய நாட்களையும், அவரது கனவுகளையும் பகிர்ந்து அஞ்சலி உரைகள் வழங்கியோருக்கும்,

தமிழினத்திற்கும், இசைக்கும் ஆற்றிய சேவைகளை மதித்து அவரை கெளரவித்தவர்களுக்கும்,

இறுதி நிகழ்வில் இசை வழங்கிய அவரின் வர்ணம் இசைக் கல்லூரி மாணவர்களுக்கும்,

ஒலி ஒளி உதவி வழங்கியோருக்கும்,

இறுதிக் கிரியைகளை முறையாக நடத்தியோருக்கும், தேவார பாராயணம் செய்தோருக்கும்,

இறுதி ஊர்வலத்தை மிகச்சிறப்பாக செய்ய உதவிய அனைத்து உறவுகளுக்கும்,

இசையால் தாளத்தால் அவருக்கு பறை வாத்திய இசை மூலம் இறுதி மரியாதை செலுத்திய தமிழ் உணர்வுமிக்க கலைஞர்களுக்கும்,

அவர் இறந்ததிலிருந்து அவரிற்கு அஞ்சலி நிகழ்வுகளை நேரடியாகவும், மெய்நிகர் (virtual) நிகழ்வாகவும் கனடாவிலும் பல வெளிநாடுகளிலும் ஒழுங்குபடுத்திய அவரது பாடசாலை, பல்கலைக்கழக நண்பர்கள், கலைஞர்கள், உறவினர்கள், இசைஆர்வலர்கள், ரசிகர்கள் ஆகியோருக்கும்,

பல நாடுகளிலிருந்தும் பட்டங்கள் வழங்கி மரியாதை செலுத்திய தமிழ் உணர்வாளர்களுக்கும் இசை ஆர்வலர்களுக்கும்,

மரண அறிவித்தல் மற்றும் கட்டுரைகள் வெளியிட்ட உள்நாட்டு வெளிநாட்டு பத்திரிகைகள், இணையத்தளங்கள், ஒலி ஒளி ஊடகங்களுக்கும்,

அஞ்சலிப் பாடல்கள் இயற்றி, இசையமைத்துப் பாடிய கலைஞர்களுக்கும்,

கவிதைகள் இயற்றிய, படங்கள் வரைந்த கலைஞர்களுக்கும்,

வீட்டிற்கு உணவுகள் கொண்டு வந்த அனைத்து உறவுகள் நண்பர்களுக்கும்,

மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் தோளோடு தோள் நின்று தேவையான உதவிகளைப் பார்த்துப் பார்த்துச் செய்த அனைத்து உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும்,

எமது மனமார்ந்த நன்றிகள்!

அன்னாரின் அன்பு அம்மா, மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்.

“புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து”
(திருக்குறள் 780) 
இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 113 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.