Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 05 NOV 1968
ஆண்டவன் அடியில் 25 SEP 2021
அமரர் இராமேஸ்வரன் வர்ணகுலசிங்கம் (வர்ண ராமேஸ்வரன்)
ஈழத்து இசைவாரிதி, சங்கீத மிருதங்க கலாவித்தகர், இசைக்கலைமணி, பல்கலைவித்தகர், நிறுவனர்- வர்ணம் இசைக் கல்லூரி, வர்ணம் கிரியேஷன்
வயது 52
அமரர் இராமேஸ்வரன் வர்ணகுலசிங்கம் 1968 - 2021 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 109 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அளவெட்டி சிறுவிளான் கிராயட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமேஸ்வரன் வர்ணகுலசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.    

அன்போடு எங்களை எல்லாம் அரவணைத்து
பாசத்தின் உயிராய் எம்முடன் வாழ்ந்து
எல்லோரையும் அழ விட்டு மறைந்த
எம் தெய்வமே! அப்பாவே!

ஓவ்வொரு விடிப்பொழுதும் நீங்கள்
எங்கே என்று எமது விழிகள் தேடுகிறது
உங்கள் நினைவுகளுடன் நாமெல்லாம்
ஒன்று சேர மனம் துடிக்குது மீண்டும்
ஒரு முறை எம்மை கட்டி அரவணைக்க
நீர் எழுந்து வாராயோ அப்பா!

கனவுகள் பல கண்டோம் எம்
அருகில் நீண்ட காலம் இருப்பீர்கள் என்று
நாம் கண்ட கனவுகள் நனவாகும் முன்பே
எம்மை விட்டு ஏன் சென்றீர்கள் அப்பா!!

இப்பொழுதும் உம் பாசத்திற்காக
ஏங்கி  நாட்கள் எல்லாம் கண்ணீரில்
கரைந்தோட கலங்கித் தவிக்கின்றோம் அப்பா!!!

என்றென்றும் உங்கள் நினைவலைகள்
அழியாது எம்முடன் வாழும்..!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 28 Sep, 2021
நன்றி நவிலல் Mon, 25 Oct, 2021