அமரர் ஆர்.எஸ்.நடராசா! பெரும் மதிப்புக்கும் அளவு கடந்த பாசத்திற்கும் அப்பால் எம் இருவரதினும் மதிப்புக்குரிய அமரர் கல்விமான் என ஊர் உலகம் போற்றி அன்புடன் மாஸ்ரர் என அழைக்கும் ஆர்.எஸ்.நடராசா மாஸ்டருக்கு எம் ஆழமறியா கண்ணீர் கவலைகளை அன்புடன் வழங்கிஓரு சில முன்மாதிரிகையான விடயங்களை பகிரவுள்ளேன். நாம் இருவரும் கூடியபாக அன்புடன் பழகிய வருடங்கள் 50யும் தாண்டிவிட்டன. அப்பாவிற்கு அப்பாவாக எம் இருவரிற்கும் அறிவுரை வழங்கும் ஆசானாகவும் பிறர் சிநேகம் படைத்தவராகவும் எம்முடன் பழகினார். தன் பிறந்த மன்னை மறந்தாலும் புகுந்த வாழ்ந்த இளவாலை மண்ணை மறக்காதவர்.பற்பல கல்விமான்களுடனும், புத்திஜீவிகளுடனும் பல காலம் பழகிய பண்புடைய கல்விமான் என போற்றி புகழ பெற்றவர். இவ்வுலகில் வாழ்ந்த நாட்களில் பிறர் அன்பும், ஒருவருக்கும் கடமைப்படாத அன்பு நேசமும் கொண்டார். எம்முடன் கதைக்கும் போது ஒரு சில முக்கியமான சமய தலைவர்களை அன்புடன் சுயநலம் விசாரிக்கும் அன்புள்ளம் கொண்டவர். எம்மை விட்டு பிரிந்த அமரர் மன்னார்ஆயர் இராயப்பு யோசோப்பின் உறவினரும் கூட.. இவரது பிரிவால் துயர்ரும் இவரின் குடும்பத்தார்களுக்கு எம் இருவரதும் ஆழ்ந்த அனுதாபத்துடன் கண்ணீர் அஞ்சலி பகிரும். செல்வம், ராணி நோர்வே
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.