மரண அறிவித்தல்
பிறப்பு 30 JUN 1933
இறப்பு 20 MAY 2022
அமரர் இராமநாதர் சுந்தரம்பிள்ளை நடராசா (R. S. N)
முன்னாள் அதிபர், பலாலி ஆசிரியர் கலாசாலை
வயது 88
அமரர் இராமநாதர் சுந்தரம்பிள்ளை நடராசா 1933 - 2022 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், இளவாலை, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதர் சுந்தரம்பிள்ளை நடராசா அவர்கள் 20-05-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமநாதர் சுந்தரம்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற சிவயோகரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சேதுபதி, குமாரசாமி, சிரோண்மணி, பராசக்தி, துரைராசா மற்றும் குலேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவஞானபாக்கியம், காலஞ்சென்ற சிவஞானரத்தினம் மற்றும் சிவயோகபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கலாமதி, நவராசா, சுதாமதி, காந்திமதி, மதுமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குமரதீசன், எலிசபெத்தா, செல்வநாதன், சங்கரன், அருள்குமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கேஷிகா, கிஷன், கரேஷ், நிகொலா, லாவண்யன், விதுஷனா, அரன், றம்மியன், திவ்வியன், மிதுரா, நிரன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 23-05-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

கலாமதி குமரதீசன் - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்