Clicky

பிறப்பு 30 JUN 1933
இறப்பு 20 MAY 2022
அமரர் இராமநாதர் சுந்தரம்பிள்ளை நடராசா (R. S. N)
முன்னாள் அதிபர், பலாலி ஆசிரியர் கலாசாலை
வயது 88
அமரர் இராமநாதர் சுந்தரம்பிள்ளை நடராசா 1933 - 2022 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Amarapala (Baba), From Norway 21 MAY 2022 Norway

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்" மனிதன் தோன்றுவதும் மறைவதும் இயற்கை. ஆனால் எல்லோரது மறைவும் சமூகத்தில் ஒரேமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. ஒருவரது மறைவின் தாக்கம் உறவுகள், நட்புகள், மக்கள் என்ற அலகுகள் ஊடாகவே கணிப்பிடப்படுகிறது. திரு இராமநாதர் சுந்தரம்பிள்ளை நடராசா அவர்கள் எனது நண்பர். ஆனால் அவரை நான் நண்பர் என்ற வட்டத்திற்கும் அப்பால் வைத்தே பார்க்கிறேன். அவரது இழப்பு எமது சமூகத்திற்கான ஒரு இழப்பாகும். அவரிடம் மானிட நேசம் இருந்தது. மனிதாபிமானம் இருந்தது. பொதுநலச் சிந்தனை இருந்தது. துன்பப்பட்டவரின் துயர் துடைக்கும் கருணை இருந்தது. 'வலது கை செய்வதை இடது கை அறியாது" உதவும் இதயம் இருந்தது. குறிப்பாக பல வருடங்களாக இலங்கையின் அரசியல் நெருக்கடி காரணமாகப் பாதிப்புக்குள்ளான மாணவர்கள் பலர் அவர்களது கல்வியில் முன்னேற உதவினார். அதனை அவர் கைமாறு கருதாமல் விளம்பரம் இன்றிச் செய்தார். அந்த வகையில் அவரது மறைவு நண்பன் என்ற முறையில் எனக்கு மிக ஆழ்ந்த துயரத்தைத் தரும் அதே வேளையில் அவரது இழப்பு எமது சமூகத்திற்கான ஒரு பேரிழப்பு என்பதாகவே நான் உணர்கிறேன். அவருடைய மறைவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். "அமைதியாக உறங்குங்கள் நண்பரே. உங்கள் நினைவு எங்கள் இதயங்களை விட்டு என்றும் நீங்காது".

Tributes