Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 12 APR 1929
மறைவு 20 JAN 2022
அமரர் இராமநாதர் நாகரெத்தினம் 1929 - 2022 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் D8 ஐ வதிவிடமாகவும், லண்டன் Eastham, சுவிஸ் Bern ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமநாதர் நாகரெத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எங்கள் அன்புத் தெய்வம் அப்பாவே!
நொடிப்பொழுதில் எமை
நோகவிட்டு சென்றுவிட்டீர்கள்..

சுவாசிக்க சுவாசம் இல்லை
 நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
 நிஜங்களைத் தேடுகின்றோம்

நிஜம் தானா என்று எண்ணி
நித்தமும் தவிக்கின்றோம் அப்பா!
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
 எங்கள் விழிகள் சிந்திடும் துளியின்
வழியில் உங்களை கண்டிட முடியாதோ..

தடுமாறிய தருணங்களில் தளராதே பிள்ளைகளே
என தட்டிக்கொடுத்து தைரியம் சொன்னவர்
தடம் மாறியபோது தட்டிக்கேட்டு அறிவுரை சொன்னவர்
நாம் வெற்றி பெற்ற போது கைத்தட்டி மகிழ்ந்தவர்
தோல்வியுற்ற போது தோள்தட்டி ஆறுதல் சொன்னவர்
தன்னம்பிக்கை என்னும் விலையில்லா விதையை
எம்முள் விதைத்தவர்

எம் கனவுகளை நிறைவேற்ற
நித்தம் உழைத்து
தன் ஆசைகள் அனைத்தையும்
தன்னுள் மறைத்து என்றும்
எமக்காக வாழ்ந்த உயிர் எம் தந்தை

ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் மனதில்
 என்றென்றும் நிறைந்திருக்கும்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 21 Jan, 2022
நன்றி நவிலல் Fri, 18 Feb, 2022