யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் D8 ஐ வதிவிடமாகவும், லண்டன் Eastham, சுவிஸ் Bern ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமநாதர் நாகரெத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:28/01/2024
பண்பும் பாசத்திற்கும் இலக்கணமாய்
நேர்மையும் தர்மமும் வழிநின்று
வையகம் போற்ற வாழ்ந்து
வானுறைந்த தெய்வமாய்
இயற்கையில் இணைந்து ஆண்டுகள்
இரண்டு ஆனாலும் எம்மனங்களில்
நிறைந்து வாழ்கின்றீர்கள் அப்பா
நாம் வாழ எம்குறைநிறை எடுத்துரைத்து
நல்வழி காட்டிய உங்கள் கருணையினை
பேறாகப் பெற்றோம் பெருமை கொண்டோம்
நீறாகிப் போனாலும் நீங்களே எமக்கு வழிகாட்டி அப்பா
எங்கள் உயிருக்கு உயிரானவர் நீங்கள் அப்பா
கண்முன்னே வாழ்ந்த காலங்கள்
கனவாகிப்போனாலும் மனம் விட்டு
மறையாமல் எம்முடன் பலகாலம் வாழ்வீர்கள் அப்பா
“எண்ணியபடி எண்ணியவாறு எமக்கருளும்
தெய்வம் எம் அப்பா”
எங்கள் உயிர் உள்ளவரை
உங்கள் நினைவுகளுடன் குடும்பத்தினர்..!
Man is mortal but the love for them is immortal. Though you are not present here with all of us but your memory is stored on our mind. Rest peacefully in heaven!