Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 23 APR 1955
மறைவு 17 FEB 2023
அமரர் இராமநாதன் பரஞ்சோதி (சோதி)
உழவர் ஒன்றிய விளையாட்டு கழக முன்னாள் தலைவரும், போசகரும் கபடி பயிற்றுவிப்பாளரும்/ சிவநகர் பாடசாலை ஓய்வு பெற்ற ஆசிரியரும்
வயது 67
அமரர் இராமநாதன் பரஞ்சோதி 1955 - 2023 குப்பிளான், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி சிவநகர் உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமநாதன் பரஞ்சோதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 07-03-2024

அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை
அனுதினமும் அரவணைத்தாய்
அல்லும் பகலும் அயராமல் எமை காத்தாய்
உலகுக்கு நீ உத்தமனாய் வாழ்ந்து நின்றாய்

எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது

நாங்கள் உங்களை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்

கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!

இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அப்பா...
மறுபடியும் உங்களைப் பார்க்க மாட்டோமா என
ஏங்கித் தவிக்கிறோம் அப்பா...

ஓயாது உங்கள் நினைவு வந்து வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும்
துடிதுடிக்க உயிரோடு வாழ்கின்றோம்

உங்கள் நினைவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், மைத்துனர்கள், 
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பெறாமக்கள், உற்றார், உறவினர்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos