

*தீராவலி* நட்பு இல்லாத வரண்ட வாழ்க்கை யாருக்கும் வரக்கூடாது நட்பில்லாத இவ்வுலகு சுற்றுவதை நிறுத்தியதாய் உணர்கிறேன்...!!! பதின்ம பருவகாலத்தில் பள்ளித் தோழனானாய்- உன் இறுதி மூச்சுவரை அதனை உறுதிப்படுத்தினாய்...!!! நேரலையில் உன் சமையலும் நேரினிலே உன்னுடனான மகிழூந்து பயணமும் நட்பால் எனக்கமைத்த கொடை தோழனே...!!! பத்மினியெனும் என் நாமத்தை *பத்து* என பாசத்தோடு சுருக்கினாய் நட்பும் இறை தானெனும் நம்பிக்கை தேனை பருக்கினாய்...!!! உன் வீட்டு பெண்ணுக்கு ஆண் தாயாய் ஆகினாய் அவள் கல்வி மேன்மைக்காக வேள்வித்தீயாய் மாறினாய்...!!! பாசங்கள் சில நேரம் பாடாய்ப் படுத்தும் அறிவேன் அதையும் தாண்டி பாசத்தை வேண்டினாய் அறிந்தேன்...!!! அன்பின் மறு உருவே, அன்றாடம் உன் அழைப்புகளில் அகமகிழ்ந்திருந்தேன் - உன் இறுதி நிமிட அழைப்புகளை அறியாமல் கோட்டை விட்டேன் அதற்காய் என் கண்கள் ஆறாகக் கண்டேன்...!!! நீ கோர்த்த கவிதைகளுக்கு ஆசான் நானென அறிவித்தாய் நீ செய்த சாதனைகளை மற்றவர் பெயர் சொல்லி பெருமை சேர்த்தாய்...!!! அன்பனே, உன் வலிகள் மறைத்து பிறர் வலிக்கு ஒத்தடம் கொடுப்பாய் எப்போதென்றாலும் எதுவென்றாலும் உன் கைகளாலேயே செலவும் செய்வாய்...!!! தோழா, நீ எனக்கு எடுத்தியம்பிய உன் கனவுகள் நீயில்லையெனினும் நிறைவேறட்டும் மீண்டும் பிறப்பெடடா உன் கனவை நண்பர்கள் நாமும் உன்னோடு சேர்ந்து கொண்டாட...!!! ரமணா, நீயில்லாத இந்த நிமிடம் ரணமடா.....!!!! ஆழ்ந்து உறங்கடா அழகனே...!!! உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வணங்குகின்றேன். கண்ணீருடன் உன் *பத்து*
May rest in peace your soul anna. My deepest condolences family and friends.🙏🙏😢😢