முல்லைத்தீவு கனுக்கேணி முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster, பிரித்தானியா Reading ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரமணன் கணபதிப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 04-04-2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் பின்னர், 05-04-2025 சனிக்கிழமை அன்று மு.ப 11:30 மணிமுதல் Ravencroft, Hook RG27 9NN எனும் முககவரியில் மதிய போசன நிகழ்வு நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
May rest in peace your soul anna. My deepest condolences family and friends.🙏🙏😢😢