வவுனியா பூந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வதிவிடமாகவும் கொண்ட இராமையா மகேந்திரராஜா அவர்கள் 23-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமையா(மின்சாரசபை உத்தியோகத்தர்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி தனலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுமதி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுகானா அவர்களின் பாசமிகு தந்தையும்,
ரியுலன்(சுகாதாரத் திணைக்களம், வவுனியா) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நாகேந்திரராஜா, நாகேந்திரராணி(இந்திரா), கமலராணி(ரஞ்சி), செல்வராணி(ஜெயந்தி), சசிதரன்(மித்திரன்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரபாகரன்(கனடா), ரவீந்திரன்(கனடா), வசந்தன்(கனடா), ஜெயகாந்தன்(கனடா), செல்வமலர், சசிகலா, வசந்தி(வவுனியா), சாந்தி(லண்டன்), ஜெயந்தி(பிரான்ஸ்), நேசரட்ணம், சிவநம்பி, கணேசலிங்கம், குமுதகுமாரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பார்கவன், சாருஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest In Peace Periyappa???