![](https://cdn.lankasririp.com/memorial/notice/202494/54611f88-9aff-4b8a-868f-e30442b643e8/22-6309cf401fae8.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/202494/3546d8f0-85c8-468d-87e6-675e290ecd8f/21-6061a3980445a-md.webp)
என் அப்பாவிற்கு ஒரு கடிதம் ஆண் அழகன் அப்பாவிற்கு அழத்தெரியாது. குடும்பத்திற்காக மாடாய் உழைத்த போதும், பிள்ளைகளின் பசியாற்ற ஓடாய் தேய்ந்த போதும், என்னடா வாழ்க்கை இது என ஒரு நாளும் அழுதிருக்கமாட்டார்! பிள்ளைகளை தோளில் சுமந்து, குடும்ப பொறுப்புகளை தலையில் சுமந்து, போகும் வழி தெரியாமல் விழிபிதுங்கி நின்ற போதும், தான் கண் கலங்கினால் குடும்பம் உடைந்து விடும் என கல்லாய் நின்றவர். ஆனால் நான் அவரை கல்லெனவே நினைத்து விட்டேன். அம்மாவிடம் ஒட்டிக்கொண்ட நான் அப்பாவிடம் எப்பவும் எட்டியே நின்றேன். முகம் பார்த்து பேசிய வார்த்தைகள் கொஞ்சமே என்றும். என்னை அள்ளி அணைது முத்தமிட்டதில்லை, என்றாலும் தள்ளினின்று உணர்ச்சி வெள்ளத்தில் ததும்பும் ஜீவன் அவர்! என்னை அள்ளி அணைத்தது என்னவோ அவர் போட்ட் சோறும் உடுத்த உடையும் படித்த படிப்பும் தான். அவர் சிந்தும் வேர்வையில்த்தான் என நான் எண்ணியதில்லை. அம்மாவின் பாசத்திற்காக அங்கலாய்க்கும் நான், அப்பாவின் பாசத்தை உணர்ந்தது கூட இல்லை. இன்று அவர் என்னுடன் பேசமுடியாத தூரம் சென்று விட்டார்! வாழ்கையில் என்னை முன்னேற்றிவிட்டு அவர் நீண்ட தூரம் பயணபப்ட்டு விட்டார். நான் எணிமேல் நிணைத்தாலும் பேசவே முடியாது. ஆனால் என் வாழ்கையில் அப்பா இருப்பார்! அவருடைய ஆத்மா சாந்தியடைய நான் என்றும் வேண்டிக்கொள்வேன் எல்லாம் வல்ல இறைவனிடம். இப்படிக்கு அன்பு மகன்.
Please accept our deepest condolences for your family's loss.