

யாழ். கொக்குவில் ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை வடக்கு சங்கரப்பிள்ளை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமச்சந்திரன் தாமோதரம்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஐந்து உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உம் அன்புமுகம் எம் நெஞ்சை விட்டு
பாசத்தைப் பொழிந்து பண்பினை ஊட்டி
பார் போற்ற எமை வளர்த்தீர்கள்
கல்வியைக் கருத்தாய் கற்று உயர்ந்திட
கண்டிப்புடன் நற்கல்வி அளித்தீர்கள்
கண்ணினின்று நீர் வழிந்தோடி
எம்மை
கலங்க வைக்கின்றதே அப்பா
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
ஐந்து வருடம் விரைந்தே போனதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே
நாம் வாழ்கின்றோம்-ஆனாலும்
உங்கள் முகம் பார்க்க துடிக்கும் வேளையில்
நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
எம்
நெஞ்சை விட்டு அகலாது
உங்கள் நினைவுகள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!!! ஓம்சாந்தி!!!
Please accept our deepest condolences for your family's loss.