5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ராஜேஸ்வரி ராஜரட்ணம்
வயது 73
Tribute
21
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ராஜேஸ்வரி ராஜரட்ணம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டைந்து போனதம்மா
அன்னையுனை நாம் பிரிந்து
மாண்டழிந்து போனாலும்
மறக்க மாட்டோம் எம் அன்னையை
வெயிலுக்கு நிழலானாய்
மழைக்கு குடையானாய்
தாகத்துக்கு நீரானாய்
சோகத்துக்கு மடியானாய் - அம்மா
ஆண்டு ஐந்து நொந்து நொந்துதான் கரைய
எங்கள் கண்ணோர விழி நீரும்
இன்னும் காயாமல் போகின்றதே
கூடிய உறவுகளோ தாயேயுன்னை
வாடிய முகத்துடன்
தேடியல்லோ திரிகின்றார்
என்றும் அழியாத ஓவியமாய்
இந்த நிலம் இருக்கும் வரை
உன் நினைவிருக்கும் எம் மனதில்!
தகவல்:
குடும்பத்தினர்
எமது அன்புத்தாயின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.