Clicky

31ம் நாள் நினைவஞ்சலி
பிறப்பு 27 APR 1947
இறப்பு 15 JUL 2020
அமரர் ராஜேஸ்வரி ராஜரட்ணம்
வயது 73
அமரர் ராஜேஸ்வரி ராஜரட்ணம் 1947 - 2020 பலாலி, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி ராஜரட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

உயிர் தந்த எம் அன்னையே
மாதம் ஒன்று போனதம்மா
உங்கள் முகம் பார்த்து
மாண்டழிந்து போனாலும்
மறக்க மாட்டோம் எம் அன்னையை
வெயிலுக்கு நிழலானாய்
மழைக்கு முடையானாய்
தாகத்துக்கு நீரானாய்
சோகத்து மடியானாய் அம்மா

குன்றின் மணியே குலவிளக்கே
எம்மைப் பெற்றெடுத்த குல தெய்வமே
வல்லமையாய் வாழ்ந்து
வழி நடத்திய எங்கள் அன்னையே
சோகம் தாங்காமல் தவிக்கிறோம்
எம் கவலை சொல்லியழ வார்த்தைகளே
இல்லையம்மா
நித்திலத்தின் முத்தாக எம்மை வளர்த்து
நித்தமும் புலம்பவிட்டுச் சென்றாயே அம்மா

உனக்கு என்ன குறையம்மா
உங்கள் பிள்ளைகளை
நல்லாக்கித்தான் சென்றாயம்மா
கோயில் கோயிலாகச் சென்று
எங்கள் எல்லோரினதும் நலம் வேண்டினாய்
அம்மா
அம்மா உங்கள் பாதத்தில் பணிந்து
ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள்
திருமால், நந்தன், சறோ, திருமகள், மோகன்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மகனின் புலம்பலை கீழே உள்ள PLAY BUTTON-ஐ அழுத்தி கேட்கலாம்

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos