2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ராஜேஸ்வரி ராஜரட்ணம்
வயது 73
Tribute
21
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ராஜேஸ்வரி ராஜரட்ணம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ விட்டுச்சென்ற
அழகான ஞாபகங்கள்
என்றுமே வெளுத்துக் கலைந்து போகாது
நீ தந்த சந்தோஷ தருணங்களிற்கு
வேறு எந்த உவமையும் இணையாய
எங்களுக்கு விளைந்து போகாது
நீ இல்லாத உலகம் இருள் சூழ்ந்த
முழு வெறுமையை அன்றி வேறெதையும்
தந்து போகாது
ஆண்டுகள் எத்தனை போனாலும்
நீ எம்மோடு பேசிய கதைகள்
நம் நெஞ்சை விட்டு அகன்று போகாது
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
எமது அன்புத்தாயின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.