மலர்ந்த முகம், உபசரிக்கும் பண்பு, பணிவான வார்த்தை, மற்றவர்களின் வளர்ச்சியில் மகிழ்வடையும் மட்டற்ற மனம் எங்கள் இராயேந்திரம்அண்ணாவுக்கு. தொறண்கயத்தில் தொடங்கிய எங்கள் தொடர்பு, எங்கிருந்தாலும் இருந்த தொடர்பு எங்களைவிட்டு தொலைதூரம் போய்விட்டீர்கள் என்ற செய்தியை தொலைபேசியில் பார்த்து துடித்துப்போனோம். தோளுக்கு தோள்கொடுத்து எங்களுக்கு உதவிய நீங்கள், இன்று உங்கள் குடும்பத்துக்கு தோளில்லாமல் தொலைதூரம் போய்விட்டீர்கள். கதிகலங்கி நிற்கும் எங்கள் றாயிஅக்கா, சோபனா குடும்பம், சகானா, ரவி குடும்பம், மற்றும் உற்றார் உறவினர்க்கு கந்தன்தான் துணை. இராயேந்திரம்அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கும் சுபா, ரவி, சிறி குடும்பங்கள். ஓம் சாந்தி. ஓம் சாந்தி. ஒம் சாந்தி.🙏,
இராஜேந்திரம் அண்ணா, நீங்கள் நல்ல வழிகாட்டியாக இருந்தீர்கள் உங்கள் தம்பிகளுக்கு அதில் நானும் ஒருத்தன். உங்கள் பிரிவு இன்னும் என்னால் ஏற்று கொள்ளமுடியவில்லை, வாழும் வரை இளமையாக இருந்தீர்கள், நல்ல...