யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேந்திரம் நடராஜா அவர்களின் நன்றி நவிலல்.
அன்பாலும் பண்பாலும் எம்மை
அரவணைத்த தெய்வமே
ஆறுதல் கூற ஆயிரம் பேர் உள்ளனர்
ஆயினும் உங்கள் இடம் வெற்றிடமே
தாத்தாவைத் தேடும் பேத்திக்கு
பதிலளிக்க முடியாமல் தவிக்கிறோம்
ஏக்கத்துடன் தேடுகின்றோம்
எங்கெங்கோ தேடுகின்றோம்
20 வருடங்களாக சூரன் போரில்
முக்கிய பங்கெடுத்த நீங்கள்
சூரன்போரையே நினைவு நாளைக்கு
முருகனுடன் சென்றீர்களா?
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இராஜேந்திரம் அண்ணா, நீங்கள் நல்ல வழிகாட்டியாக இருந்தீர்கள் உங்கள் தம்பிகளுக்கு அதில் நானும் ஒருத்தன். உங்கள் பிரிவு இன்னும் என்னால் ஏற்று கொள்ளமுடியவில்லை, வாழும் வரை இளமையாக இருந்தீர்கள், நல்ல...