10ம் ஆண்டு நினைவஞ்சலி
![](https://cdn.lankasririp.com/memorial/notice/211958/8a97390f-9404-4408-93db-7997320d42b5/22-622a749cc9cb0.webp)
அமரர் ராஜ் சூசைப்பிள்ளை
(அப்பையா)
இறப்பு
- 06 APR 2012
Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Catford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ராஜ் சூசைப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்தாண்டு ஆனதுவோ அண்ணா
இன்னும் உங்கள் தெளிவான பேச்சும்
நேர்த்தியான எண்ணங்களும்
எம் நெஞ்சை விட்டு விலகவில்லை.
வாழ்க்கை எனும் படகினிலே
பாசம் எனும் வலை விரித்து
ஆழமான கடலினிலே
எம்மையெல்லாம்
தவிக்கவிட்டு
எங்குதான் சென்றீர்களோ.....
காலங்கள் அகன்றாலும் கோலங்கள் அழிந்தாலும்
ஞலத்தில் உன் நினைவு ஒழிந்தோடுமோ..!
ஆண்டுகள் பல போனாலும் ஆகாயம் உடைந்தாலும்
அண்ணா உன் முகவரிகள் மறந்திடுமோ
மாளாத துயர் தந்து மீளாது
துயில் கொள்ளும்
எங்கள் ராஜ் அண்ணா..!
என்றைக்கும் உனதன்பை மறவாது
இறைவனை வணங்கி வேண்டி நிற்போம்.
தகவல்:
குடும்பத்தினர்