ஏழாலையை பிறப்பிடமாகவும் பிரான்சு மண்ணை வாழ்விடமாகவும் கொண்ட புஸ்பராணி இளங்வோவன் (தமிழ்ப்பிரியா) 07/05/2020 வியாழக்கிழமை காலமாகி விட்டார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எமக்கெல்லாம் குலதெய்வமாகிய மேல்மருவத்தூர் ஆதிபாராசக்தியை மன்றாடுகிறோம். இவர் ஈழத்தில் எழுத்தாளராக இருந்தவர். அதிகமாக அவர் விரும்பிப் படைத்த படைப்பு சிறுகதையே. உண்மையில் சிறுகதையில் எழுதப்படும் பாத்திரங்கள் கற்பனையில் எழுதப்பட்டாலும் வாசிப்போர் உள்ளங்களில் உயிரோட்டமானவையாக இருக்கும். அவ்வாறு இருந்தது இவரது படைப்புக்கள். ஒருவர் இருக்கும் போது அவரின் அருமை எமக்கு தெரிவதில்லை . இப்போ இவரை நாம் இழந்து நிற்கும் போது அதை நாம் உணர்கிறோம். இதை விட இவரது மிகச் சிறந்த பணியானது ஆன்மீகப் பணி. இதில் தனது கணவருடன் இணைந்து இருபது வருடங்கள் லா கூர் னேவ் ஆதிபராசக்தி மன்றத்தை சிறப்பாக நடாத்தி முடித்தவர். அவ்வேளையிலே இவரை சிறுவர்கள் செல்லமாக மிம்மி என்று அழைத்தனர். மிகவும் ஒரு தைரியமான துணிச்சல் மிக்க பெண்மணியும் கூட. இவரின் வாழ்க்கைம்ப் பயணம் நிறைந்த ஓர் தடாகம். இவரின் இழப்பினால் தவித்து நிற்கும் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிற்கிறோம். ??? மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சீஸ் றூத் மன்றம்