யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த புஸ்பராணி இளங்கோவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
26-04-2021 சித்திரா பௌர்ணமி நன்நாளில் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தின் பிறப்பிடமாகவும்,
அன்பின் ஊற்றாகவும்,
எல்லோரின் இதயத்தையும் தொட்டதனால்
எல்லா இதயங்களும் இன்னும் அழுகின்றன!
இதயத்தில் அன்பு கொண்ட நீ
என்றென்றும் இருப்பதாகவே உணர்கின்றோம்!
எங்களுக்குத் தலைவியாகவும்,
சகோதர சகோதரிகளுக்கு தாயாகவும் இருந்தவள்
அப்பொழுது புரிந்துகொள்ள முடியவில்லை
பிரியும் பொழுது புரிந்துகொண்டோம்
இயற்பெயரை ராணியாகக் கொண்டு
இதயத்தில் வீற்றிருந்தாய்
புனைபெயரை பிரியாவாகச் கொண்டு
சொல்லாமல் பிரிந்து சென்றாய்- இப்பொழுதும்
இதயம் எண்ணி எண்ணித் துடிக்கின்றது
சித்திரா பௌர்ணமியில் மறைந்ததனால்- எங்கள்
நித்திரை தொலைந்து போனதே!
ஆயிரம் மேடைகளை அலங்கரித்தவளே!
ஆற்றலை தரணியிலே விதைத்தவளே!- இறுதியில்
அன்னை ஆதிபராசக்தியின் அடியில் கலந்தவளே!
தமிழ் வாழும்வரை! எங்கள் நினைவு மறையும் வரை என்றும்
பிரியா எங்களுடன் வாழ்ந்து கொண்டே இருப்பார்!
பேச்சிலே நீ! எங்கள் மூச்சிலே நீ!
நீங்காத நினைவு எம் நெஞ்சை விட்டு நீங்கா!
ஆத்ம சாந்திக்காக ஆண்டவனைப் பிராத்திக்கின்றோம்.
என்றென்றும் பிரிவால் வாடும் இளங்கோவன் குடும்பத்தினர்
அன்னாரின் சகோதர, சகோதரிகள் குடும்பத்தினர்.