We are sorry for your loss, was such a great teacher, The memories will live forever with us. அழகான வேலணை மத்திய கல்லூரியின் மேல் மாடியில் அழகாக அமைந்திருக்கும், விலங்கியல் ஆய்வு கூடத்தின் விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியை. நான் கற்ற காலத்தில் 1985 மூத்த முதுநிலை சிரேஷ்ர ஆசிரியை.பாடவிதான நேரசூசிகைப் பொறுப்பாசிரியை . இவருடன் உடன் பணியாற்றிய திருமதி.பழனி. திருமதி.வசந்தமாலா,சிவபாலன் மற்றும் திருமதி.கலாரஜனி,கலாதரன், இவர்கள் எல்லோரும் இவ் வேளையில் நன்றாக நினைவு வருகிறது. ( teachers subject management group ) இவரின் மற்றுமோர் சிறப்பு தங்கை சகோதரி. திருமதி.சோதி.சற்குருநாதன் அவர்களும் இணைய ஆசிரியப்பணி . இவர்கள் இருவரையும் அவர்களின் , தந்தை வேலணை , கிழக்கு பேராசன்.மறைந்த திரு.சி,இராஜரட்ணம் . அவர்கள். தனது காரில் காலை பாடசாலைக்கு அழைத்து வரும் காட்சியும், இப்போதும் என் மனதில். அறம் செய் ஆத்மார்த்த கல்வியின் அர்ப்பணம் என் சிந்தையின் தெளிவு. மதிப்புக்குரிய மறைந்த திருமதி.புஷ்பா சின்னையா அவர்களின் ஆசிரியப்பணி,சிறப்பான, செம்மைக்குரியது. மேலும் இவர் வேலணை கிழக்கு. தாழிபுலம். என்பதால் அது இன்னும் அதித தனிக் கௌரவ். இவரின் பன்முகப் பயன் எம் வேலணை பெற்றது .. அவர் மாண்பும், என்றும் எம் நினைவில் வாழும். என்றும் நாம் நன்றியால் போற்றுகிறோம் வணங்குகிறோம். இணையில்லாத இறை திருவடி நிழலே , அருட் கழலே பலமுறை இறையே , ஓம் சாந்தி பழைய மாணவன்,சிவ-இரமணன். பொலிஸ் . சின்னத்தம்பி பேரன் வேலணை ஆலம்புலம்,1
Dear All, Thank you so much for your kindness and beautiful words about Amma We truly appreciate Kind regards Kavitha (daughter )