யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Richmond Hill ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புஷ்பராஜவதி சின்னையா அவர்களின் நன்றி நவிலல்.
இன்றோடு 31 நாட்கள்
அவணியிலே நீங்கள் இல்லை
கலங்கரை விளக்கைத் தேடி
கணப்பொழுதும் தவிக்கின்றோம்
நினைவுகள் வருகையிலே
நிலைகுலைந்து போகின்றோம்
காணும் காட்சிகளின்
கண்முன்னே நிற்கின்றீர் !
அன்பாய் அழைத்திட
இனி யாருண்டு இவ்புவியினியே
வேதனையை சொல்லிடவே
வார்த்தைகள் இல்லையம்மா
கல்வித்திறனை வாரி வழங்கி
நீங்கள் வாழ்ந்த இவ்வுலகில்
உங்கள் வழிகாட்டலில் பயணிக்கும்
மாணவமணிகள் அதற்கு சான்று நிற்க
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Dear All, Thank you so much for your kindness and beautiful words about Amma We truly appreciate Kind regards Kavitha (daughter )