மரண அறிவித்தல்
பிறப்பு 05 JAN 1938
இறப்பு 17 MAY 2022
திருமதி புஷ்பராஜவதி சின்னையா (புஷ்பா)
இளைப்பாறிய அதிபர், விரிவுரையாளர் - National Institute of Education
வயது 84
திருமதி புஷ்பராஜவதி சின்னையா 1938 - 2022 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Richmond Hill ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புஷ்பராஜவதி சின்னையா அவர்கள் 17-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr.  சிதம்பரப்பிள்ளை இராஜரட்ணம்(ஓய்வுபெற்ற அதிபர், பிரபல சித்த வைத்தியர் வேலணை), உருக்குமணி(ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி தம்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னையா அவர்களின் அன்பு மனைவியும்,

அனுஷா, Dr. கவிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான புஷ்பதிலகவதி கணேசலிங்கம்(புஷ்பா- ஓய்வுபெற்ற பிரதி கல்விப்பணிப்பாளர், தென்மராட்சி), புஷ்பரட்ணவதி மற்றும் பேராசிரியர் சிவசந்திரன்(முன்னாள் கலைப்பீடாதிபதி- யாழ். பல்கலைகழகம்), இராசமலர்(சோதி- முன்னாள் ஆசிரியை, வேலணை மத்திய கல்லூரி, In-Service Advisor, Education), சிவமலர்(முன்னாள் உப அதிபர்), காலஞ்சென்ற பாலசந்திரன்(முன்னாள் வங்கி முகாமையாளர்) , ஜெயசந்திரன்(முன்னாள் இலங்கை கூட்டுத்தாபன நிகழ்ச்சி தொகுப்பாளார்)  ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,

ரவிக்குமார், Dr. சூரியகுமார் ஆகியோரின் அன்பு மாமியும்,

சேஷன், அரன், ஸ்வரா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரவிக்குமார் - மருமகன்
அனுஷா - மகள்
சூரியகுமார் - மருமகன்
கவிதா - மகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 17 Jun, 2022