Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 MAR 1984
இறப்பு 28 OCT 2012
அமரர் பிரணவி பிரகாஷ் 1984 - 2012 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

மட்டு. புளியந்தீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Shrewsbury ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரணவி பிரகாஷ் (பிரணவி மகாதேவா) அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

இன்று வரை நாம் பத்து
 வருடங்கள் நகர்ந்தும்
உன்னோடு வாழ்ந்த நினைவில்
ஒரு துளியும் மறக்கவில்லை..
 
கற்பனை உலகில் நாட்களை நகர்த்தி
 ஜடமாய் நகர்கின்றோம் ஒவ்வொரு நொடியும்
 வாழ்வினிலே சிறந்து வளமாக வாழ்ந்த
 உன்னை காலனவன் கவர்ந்து சென்ற
காரணத்தை நாம் அறியோம்?

பாருலகம் கண்ணீரை மழையெனவே சிந்திடுதே
நீ வானுலகம் சென்றாலும் உன் நினைவதுவோ
எம் நெஞ்சில் என்றும் அகலாது ...!

வையத்தில் நீ வாழ்ந்தபோது
வாழ்வெமக்கு வசந்தமாய் ஆனது
வானுறையும் தெய்வத்துள் கலந்தபோது
வாழ்வே எமக்கு கசந்து விட்டது

எம்மை பரிதவிக்க விட்டு பறந்து
நீ சென்றதும் ஏனோ?
கலங்கி துடித்தாலும் கண் காணாமல்
 நாம் அழுதாலும் உன் ஆன்மா
ஆண்டவன் காலடியில் சாந்தியடைய
அனுதினமும் நாம் இறைவனை பிராத்திக்கிறோம்!

உன் காலடியில் எம்மன்பை
நினைவு மலர்களாய் சமர்ப்பிக்கின்றோம்..  

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices