யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிரபாகரன் கந்தையா அவர்களின் நன்றி நவிலல்.
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட பிரபாகரன் கந்தையா பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த Father ஜோசப் சந்திரகாந்தன் மற்றும் Father பற்றிக் ஞானப்பிரகாசம் ஆகியோருக்கும், உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Sorry to hear about your loss. My deepest sympathies. May his soul rest in peace.