Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 JAN 1955
இறப்பு 15 JUN 2020
அமரர் பிரபாகரன் கந்தையா 1955 - 2020 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 43 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பிரபாகரன் கந்தையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
அன்பின் பிறப்பிடமாய்...
அமைதியின் அடைக்கலமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...!

நீங்கள் எங்களை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் ஆசை முகம் எங்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும்.
உங்களோடு வாழ்ந்த நாட்கள் திரும்பி வராதா.. என்று எண்ணித் துடிக்கின்றோம்.


உடல் உயிரை பிரிந்தாலும் உணர்வுடன்
ஒன்றாகிப்போன எம் உடன்பிறப்பே
நீங்கள் நடந்த பாதையெல்லாம்
எம் நினைவும் தொடர்கிறதே
பலமிழந்து பரிதவிக்கின்றோம்
உங்கள் இழப்பை எதிர் கொண்டு
ஒரு வருடம் தான் ஆகியதோ?

பார் புகழும் சகோதரரே எங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் இன்றி
சிறு துரும்பும் அசைந்ததில்லை - எங்கள் சகோதரா !!!

உங்கள் பிரிவால் வாடும் அன்புச்
சகோதர, சகோதரிகள் மற்றும் குடும்பத்தினர்!!!

தகவல்: குடும்பத்தினர்