Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 JAN 1955
இறப்பு 15 JUN 2020
அமரர் பிரபாகரன் கந்தையா 1955 - 2020 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 43 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பிரபாகரன் கந்தையா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

நெஞ்சம் நிறைந்திட்டவரின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி...

எங்கள் பாசத்து அருமை உடன்பிறப்பே
பெருந்துணையென இருந்திட்ட சகோதரனே
தேசத்தை விட்டு பிரிந்து 2 ஆண்டு வந்தும்
கவலையும் தீரவில்லை கண்ணீரும் காயவில்லை

உங்கள் அருமை உறவுகள்
அருகிலிருந்த நாட்களை நினைத்திட
கண்கள் நித்தம் கண்ணீரால்
நிறைகின்றது எம்விழிகளில் உந்தன்
ஆசைமுகம் தோன்றுதே.

அக்கா, தங்கை அண்ணன், தம்பி
 மீது அளவற்ற அன்பு கொண்டாயே
காலன் வசம் சென்றிட காலம்
இதுவல்ல பிரபு காலம் செய்திட்ட
சதியால் கலங்கித்தவிக்கிறோம்.

அன்பால் பண்பால் எல்லோர் மனம்
நிறைந்தாய் பழகுவதற்கு என்றும்
இனிமையுடைவரே ஆண்டு பல
ஓடிமறைந்தாலும் அன்புருவே உந்தன்
அழகுத்தோற்றம் எங்கள் நெஞ்சமதைவிட்டு
அகலாது அப்பா அம்மா
சகோதரியோடு ஒன்றாய் கலந்திருப்பாய்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்