

கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், இராமநாதபுரம் 5ம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சிவபாலன் அவர்கள் 08-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அனலைதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னுத்துரை, மங்கயற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், சரவணையைச் சேர்ந்த காலஞ்சென்ற இரத்தினசபாபதி, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதாதேவி(தேவி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுபாசினி, சுகிர்தா, குகறயனி, சங்கவி, அபிஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நந்தரூபன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சாந்தலட்சுமி(கனடா), லவநேசன்(லண்டன்), கெளரி(கனடா), காலஞ்சென்ற இந்திரஜித், திருமகள்(இலங்கை), மோகனவதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விமலன்(ஜேர்மனி), விசாகேசன்(ஜேர்மனி), விஜயகுமார்(இலங்கை), தீபா(இலங்கை), சகாதேவன், புஸ்பமாலா, குகநேந்திரன், சசிதரன், நந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கரிஸ், கவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் அவரது வீட்டில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து மம்மில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 334, 5ம் வீதி,
இராமநாதபுரம்,
வட்டக்கச்சி, கிளிநொச்சி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details