2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னுச்சாமி குணரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 26-05-2024
மறவா நினைவுகளை மனதோடு தந்துவிட்டு
இறையோடு சென்று இன்றுடன்
இரண்டு ஆண்டுகள் ஆகுதைய்யா
வார்த்தைகளால் சொல்ல முடியாத வலிகள்
உங்கள் இழப்பு உங்கள் புன்சிரிப்பும்
பாசம் நிறைந்த அரவணைப்பும் எங்களை
ஒவ்வொரு நாளும் ஏங்க வைக்கிறது அப்பா
காலங்கள் தான் போனதப்பா
உங்களை பிரிந்த வேதனை
இன்னமும் குறையவில்லையப்பா
உன் அன்பை தோற்கடிக்கும் மற்றொரு அன்பை
உலகில் யாரும் தரப்போவது இல்லை
உன்னை தவிர அப்பா...
அப்பா உங்கள் நினைவுகள் எங்களை விட்டு
மறையவில்லை அன்றில்லை, இன்றில்லை என்றுமே,
எங்கள் உடலில் உயிர் உள்ள வரை
உங்கள் நினைவுகள் என்றும்
அழியா பொக்கிஷம் அப்பா..!
தகவல்:
குடும்பத்தினர்