Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னுச்சாமி குணரத்தினம்
இறப்பு - 19 MAY 2022
அமரர் பொன்னுச்சாமி குணரத்தினம் 2022 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னுச்சாமி குணரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 07-06-2023

அன்பின் திருவுருவாய்
 அகத்தின் ஒளிவிளக்கே -அப்பா!
 நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
 ஓராண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
 ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா!

கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
 கனவாகிப் போனதுவோ!
 அப்பா எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
 துடித்து பதை பதைத்த நினைவுகளை
 இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!
 எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
 பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
 எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்-அப்பா
மாறாது ஒருபோதும் உம் கொள்கை
நம் வாழ்வில் என்றும் மறையாது
 உங்கள் நினைவு
எம் மனதை விட்டு அப்பா!!!

தகவல்: குடும்பத்தினர்