4ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சிறுப்பிட்டி- திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா பரமேஸ்வரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அழகான முகவரிக்கு சொந்தக்காரர் நீ தான் அப்பா....!
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!
வசந்தகாலம் என்றால் அது
உங்களுடன் வாழ்ந்த காலம் தானே!
வாழ்க்கை என்பது இறைவன்
அவன் வகுத்தவரை தானே!
இன்றோடு நான்காண்டு கடந்தாலும்
உங்கள் அன்பு முகம், பண்பு, பரிவு, பாசம் மாறாதே!
நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!
உங்கள் ஆத்ம சாந்திக்காக
பிரார்த்திக்கும் குடும்பத்தினர்,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்..
தகவல்:
குடும்பத்தினர்