
திதி:08/05/2025
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா பரமேஸ்வரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒரு திசையா காற்று பல திசை வரும்
திசை ஏது என்று அறியா போதும்
துன்பங்கள் எம்மை சூழல நினைத்தாலும்
தடுத்து ஆழ்பாவன் நீங்கள்தானே அப்பா..!
என்றேன்றும் எமக்கு அழிய அழகான
முகவரி நீங்கள் தானே என்றும் எமக்கு அப்பா..!
ஆண்டுகள் மூன்று உருண்டோடி
மறைந்தாலும்
அகலாது உம் அன்புமுகம்
எம் நெஞ்சை விட்டு
பாசத்தைப் பொழிந்து
பண்பினை ஊட்டி
பார் போற்ற எமை வளர்த்தீர்கள்
அப்பா என்ற வலிமையை நீங்கள்
இல்லாத
காலங்கள் எமக்கு உணர்த்துகின்றன
இப்போது நாம் வாழும் வாழ்வின்
பெருமைகளுள் உங்கள் வியர்வைத்
துளிகள்தான் ஒளிந்து மெருகூட்டுகின்றன
நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக
நீங்கள் இருந்தீர்கள்!
உங்கள் குரல்
எங்கள் காதுகளில்
இப்போதும்
கணீரென்று கேட்குதப்பா!
ஆண்டுகள் கடந்தாலும் உங்கள்
புன்முறுவல்
பூப்பூத்தவதனமாய்
இருந்துகொண்டே இருக்கும்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!