யாழ். சுதுமலை வடக்கு கேணிக்கரையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் தயானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உடன் பிறப்பின் நினைவு கூறல்
என் அன்பு அண்ணா
மனிதருள் மாணிக்கமே!
உங்களை இழந்து
ஆண்டொன்று ஆகிறதே
கனவுபோல் எல்லாம் முடிந்ததுவே
கள்ளம் கபடம் ஏதுமில்லா
களங்கமற்ற புன்னகையுடன்
உடன்பிறப்பெல்லாருக்கும் சிறந்த பிறப்பாய்
உன் மனைவிக்கு சிறந்த கணவனாய்
உன் பிள்ளைகட்கு சிறந்த தகப்பனாய்
மாணவர் மெச்சும் அதிபராய்
ஆசிரியர்கட்கெல்லாம் ஆசானாய்
அன்புச் சகோதரனாய்
சிறந்த தாய்மாமனாய் எம் பிள்ளைகள்
ஆசையுடன் குட்டி மாமா, தயா சித்தப்பா
என்று அழைப்பார்கள் பாசத்துடன்
எல்லோரையும் தவிக்கவிட்டு விண்சென்று
ஆண்டு ஒன்றாகியதோ! உமது
அகவை 50 இல் உன்னருகில் நானிருந்தேன்
இரண்டு ஆண்டுகள் கழிவதற்குள்
ஏனிந்த அவசரம்
ஆண்டாண்டுதான் அழுது புரண்டாலும்
மாண்டார்தான் வருவாரோ
இதன் அர்த்தம் இப்போ உணர்கிறோம்
எம் உயிருள்ளவரை உம் ஆத்ம
சாந்திக்காய் பிரார்த்திப்போம்
என்றும்
ஓம் சாந்தி!
தயாநந்தன் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் . ஒம் சாந்தி சாந்தி சாந்தி.